உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு சிறை கைதிகளின் பீடி போராட்டம் வாபஸ்

 பெங்களூரு சிறை கைதிகளின் பீடி போராட்டம் வாபஸ்

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் பீடி, சிகரெட் விற்பனைக்கு அனுமதிக்க கோரி, நான்கு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த கைதிகள், அதிகாரிகளின் எச்சரிக்கையை அடுத்து, வாபஸ் பெற்றனர். பெங்களூரில் கைதிகள் மொபைல் போன், மதுபானம், புகையிலை பயன்படுத்தும் வீடியோக்கள் பரவியதால், மாநில அரசு சிறை துறை மீது அதிருப்தி அடைந்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா புதிய தலைமை சிறை கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ்., அதிகாரி அன்ஷு குமார் நியமிக்கப்பட்டார். இவர், சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால், முறைகேடுகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மொபைல் போன், பீடி, சிகரெட் பயன்படுத்த முடியாமல் கோபத்தில் இருந்த கைதிகள், நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளோ, சிறை விதிகள்படி, சிறையில் பீடி, சிகரெட் விற்க முடியாது என்று கூறியும், கைதிகள் கேட்கவில்லை. தலைமை சிறை கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ்., அதிகாரி அன்ஷு குமார் பேசியும் கைதிகள் கேட்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த பின், நேற்று முன்தினம் இரவு கைதிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை