உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டி.ஜி.பி., சலீம் நியமனத்தை எதிர்த்து அரசுக்கு பெங்களூரு வக்கீல் கடிதம்

டி.ஜி.பி., சலீம் நியமனத்தை எதிர்த்து அரசுக்கு பெங்களூரு வக்கீல் கடிதம்

பெங்களூரு : டி.ஜி.பி., சலீம் நியமனத்தை எதிர்த்து, கர்நாடக அரசின் தலைமை செயலருக்கு, பெங்களூரு வக்கீல் கடிதம் எழுதியுள்ளார்.கர்நாடக டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த அலோக் மோகன் கடந்த 21ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக டி.ஜி.பி., பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சலீம், பிரசாந்த் குமார் தாக்கூர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.கன்னடர் என்பதால் சலீமுக்கு டி.ஜி.பி., பதவி வழங்க வேண்டும் என்று, அரசுக்கு, கன்னட அமைப்புகள் கோரிக்கை வைத்தன.இதனால் அலோக் மோகன் ஓய்வை தொடர்ந்து, தற்காலிக டி.ஜி.பி.,யாக சலீம் நியமிக்கப்பட்டார். பின், முழு நேர டி.ஜி.பி.,யாக அவரை நியமித்து அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த வக்கீல் சுதா கட்வா, கர்நாடக அரசின் தலைமைச் செயலர் ஷாலினிக்கு எழுதியுள்ள கடிதம்:டி.ஜி.பி., சலீம் நியமனம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடக்கவில்லை. அவரது நியமனம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. இதனால் சலீமை டி.ஜி.பி.,யாக நியமித்த உத்தரவை ரத்து செய்து, அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும்.உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமனம் செய்யப்பட வேண்டும். ஏழு நாட்களுக்குள் சலீமை டி.ஜி.பி., பதவியில் இருந்து மாற்றாவிட்டால், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி