வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதெப்படி இந்த பீம் ஆர்மி திடீரென உள்ளே நுழைகிறது? இதற்கு பின்னணியில் யார்? கண்டிப்பாக தேச விரோத காங்கின் மெகா ஊழல் வாரிசின் ...தான் உள்ளான்
கலபுரகி: ''சித்தாபூரில் நவ., 2ல் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தவும், அதன் சக்தியையும் காட்ட விடமாட்டோம்,'' என பீம் ஆர்மி அமைப்பு தலைவர் தவடே எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, அக்., 19 ல் கலபுரகியின் சித்தாபூரில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதே நாளில், பீம் ஆர்மி அமைப்பும் ஊர்வலம் நடத்த முடிவு செய்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற கலபுரகி கிளை நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தாசில்தாரின் உத்தரவை உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., மேல்முறையீடு செய்தது. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பீம் ஆர்மி மாநில தலைவர் தவடே கூறியதாவது: நவ.,2ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி தரக்கூடாது என்று மாவட்ட மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் மனுக் கொடுத்துள்ளோம். பதிவு செய்யப்படாத அமைப்புக்கு நுாற்றாண்டு விழா எங்கிருந்து வந்தது? பதிவு செய்யாத அமைப்பு, கையில் தடியுடன் செல்ல அனுமதிப்பீர்களா? நவ., 2ம் தேதி எங்கள் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும். அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக தன் பலத்தை காட்ட ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தாலும், நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். நாங்கள் சட்ட போராட்டத்துக்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதெப்படி இந்த பீம் ஆர்மி திடீரென உள்ளே நுழைகிறது? இதற்கு பின்னணியில் யார்? கண்டிப்பாக தேச விரோத காங்கின் மெகா ஊழல் வாரிசின் ...தான் உள்ளான்