பயங்கரவாதியுடன் தொடர்பு பீதர் இளைஞர் கைது
பீதர்: பயங்கரவாதி என, அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஷஹஜாத் பட்டியுடன், தொடர்பில் இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது குறித்து, பீதர் எஸ்.பி., பிரதீப் குந்தி, நேற்று அளித்த பேட்டி: பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவின், யெங்கூரு கிராமத்தில் வசிப்பவர் விஷால்குமார் மெத்ரே, 24. இவர் பயங்கரவாதி என, அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஷஹஜாத் பட்டி, ராணா ஹுசேன், நோமி கான், உத்தர பிரதேசத்தின், மைன்புரியை ஆஷு சர்மா, மத்தியபிரதேசத்தின், கார்கோனை சேர்ந்தராஜ்பாய், ஆயுத கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நபர்களுடன், தொடர்பில் இருந்தார். ஷஹஜாத் பட்டியுடன், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் வழியாக, விஷால்குமார் மெத்ரே தொடர்பில் இருந்துள்ளார். சட்டவிரோதமாக துப்பாக்கிகள் விற்பது குறித்து, ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததால், அக்டோபர் 1ம் தேதியன்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள், அவரை கைது செய்தனர். அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் வழியாக, ஷஹஜாத் பட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான ராணா ஹுசைனுடன் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஷால்குமார் மெத்ரே, 2025ன் டிசம்பரில் இருந்து, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.