உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெரிய ஹோட்டல்களும் தப்ப முடியாது அமைச்சர் காதர் பகிரங்க எச்சரிக்கை

 பெரிய ஹோட்டல்களும் தப்ப முடியாது அமைச்சர் காதர் பகிரங்க எச்சரிக்கை

மங்களூரு: ''உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் எவ்வளவு பெரிய ஹோட்டலாக இருந்தாலும் தப்ப முடியாது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் எச்சரித்தார். நேற்று அவர் அளித்த பேட்டி: ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுதும் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தொடர் ஆய்வுகள் யாரையும் தண்டிக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை. ஹோட்டல்களில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எங்களுடைய நோக்கம். உண்மையான நிலவரம் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதே அரசின் கடமை.மங்களூரில் உள்ள ஹோட்டல்களில் சோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன். இதுபோன்ற சோதனைகள் மாநிலம் முழுதும் தொடரும். ஹோட்டல் உரிமையாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தரமான உணவுகளையே பயன்படுத்த வேண்டும். சமையல் தயாரிக்கும் இடங்களில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் எவ்வளவு பெரிய ஹோட்டலாக இருந்தாலும் தப்ப முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ