உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூட்டு

பா.ஜ., - எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பூட்டு

ஆர்.ஆர்.நகர்: பெங்களூரு ஆர்.ஆர். நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா அலுவலகத்திற்கு, போலீசார் பூட்டுப் போட்டனர். பட்டாசு பெட்டிகளை குவித்து வைத்திருந்தால் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெங்களூரு, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா. இவரது எம்.எல்.ஏ., அலுவலகம் லக்கரே வெளிவட்ட சாலையில் லட்சுமிதேவி நகரில் உள்ளது. நேற்று காலை முனிரத்னாவின் அலுவலகத்திற்கு சென்ற, நந்தினி லே - அவுட் போலீசார், அலுவலக ஊழியர்கள், எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்களை வெளியேற்றி அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர். அனுமதி மறுப்பு சிறிது நேரத்தில் முனிரத்னா அங்கு வந்தார். ''எதற்காக என் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டீர்கள்?'' என்று, போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். போலீசார் கூறுகையில், 'உங்கள் அலுவலகத்தில் பட்டாசு பெட்டிகளை குவித்து வைத்துள்ளீர்கள். பாதுகாப்பு நடவடிக்கையாக பூட்டுப் போட்டோம்' என்றனர். இதனால் கடுப்பான முனிரத்னா, ''பட்டாசு பெட்டிகளை என் தொகுதி மக்களுக்கு கொடுக்க வைத்துள்ளேன். அலுவலகத்தில் இருந்து வெளியே எடுத்து வந்து விநியோகம் செய்கிறேன். இல்லாவிட்டால், ஒவ்வொரு வீடாக சென்று விநியோகிக்கிறேன்,'' என்றார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 'பட்டாசுகளை உங்கள் அலுவலகத்தில் வைத்திருக்கவும், வினியோகம் செய்யவும் ஜி.பி.ஏ.,விடம் இருந்து அனுமதி வாங்குங்கள்' என போலீசார் கூறினர். அதிருப்தி அடைந்த முனிரத்னா, ''புதிது, புதிதாக சட்டம் போடுகிறீர்கள். சரி நீங்கள் சொல்வதை கேட்கிறேன்,'' என கூறினார். இதையடுத்து அவரது அலுவலகம் திறக்கப்பட்டது. குப்பை, புழு பின், முனிரத்னா அளித்த பேட்டி: என் தொகுதியில் வசிக்கும் ஏழை மக்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்வோருக்கு விநியோகிக்க பட்டாசு பெட்டிகளை அலுவலகத்தில் வைத்திருந்தேன். கடந்த 12 ஆண்டுகளாக பட்டாசு பெட்டி வினியோகம் செய்கிறேன். இதன் பின்னணியில் காங்கிரசின் குஸ்மா உள்ளார். அவருக்கு எம். எல்.ஏ., ஆக வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. அவர் கூறியதால் தான், என் அலுவலகத்திற்கு பூட்டுப் போடப்பட்டது. மக்களால் தேர்வான எம்.எல்.ஏ.,வான என்னை 'குப்பை, சாணம், புழு' என்று குஸ்மா விமர்சனம் செய்கிறார். தொந்தரவு குஸ்மாவின் கணவரான ஐ.ஏ.எஸ்., ரவி தற்கொலை செய்தபோது, கணவரின் தற்கொலைக்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குஸ்மா போராட்டம் நடத்தினார். இப்போது காங்கிரசில் இணைந்து, என்னென்ன செய்கிறார் என்று, மக்கள் பார்க்கின்றனர். என்னை எதிர்த்து போட்டியிட்டு, தோற்ற குஸ்மா, எனக்கு தொந்தரவு தருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை