உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மேற்கு வங்கத்தில் பா.ஜ., சூழ்ச்சி காங்., - எம்.எல்.ஏ., கண்டுபிடிப்பு

 மேற்கு வங்கத்தில் பா.ஜ., சூழ்ச்சி காங்., - எம்.எல்.ஏ., கண்டுபிடிப்பு

ஹாசன்: மேற்கு வங்கத்தில் சூழ்ச்சி செய்ததன் மூலமே, பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளதாக அரிசிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடா குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகம், ஆந்திராவில் இருக்கும் மக்கள், எப்போதும் நடிகர், நடிகையருக்கே ஓட்டளிப்பர். இதனாலே, தமிழகத்தில் விஜய்க்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. அவருக்கு அதிக ஓட்டுகள் விழும் என்பதை, நான் முன்பே கணித்தேன். கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது மகிழ்ச்சி. மேற்கு வங்கத்தில் வெற்றி பெற கடந்த ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ., பல தந்திரங்கள் செய்தது. மம்தா ஆதரவாளர்களின் ஓட்டுகள் நீக்கப்பட்டன. இதன் மூலமே மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இது, பா.ஜ.,வின் வெற்றி அல்ல; தேர்தல் ஆணையத்தின் வெற்றியே. மம்தாவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் ஒரு தேசிய தலைவராவார். தாவணகெரே தெற்கில் முஸ்லிம் தலைவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அனைவருமே காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். இதை தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக காண்பிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை