உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குஷால்நகர் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது

குஷால்நகர் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது

குடகு : பா.ஜ., தொண்டர் தற்கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி, குஷால்நகர் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற, விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.குடகின் சோம்வார்பேட் கோனிமரூர் கிராமத்தின் வினய் சோமய்யா, 35. பா.ஜ., தொண்டர். நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, தான் வேலை செய்த நிறுவனத்தில் வினய் சோமய்யா துாக்கிட்டுத் தற்கொலை செய்தார்.தன் சாவுக்கு எம்.எல். ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா, காங்கிரஸ் பிரமுகர் தென்னிரா மஹினா ஆகியோர் தான் காரணம் என கடிதம் எழுதி, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.வினய் சகோதரர் ஜீவன் அளித்த புகாரில், தென்னிரா மஹினா மீது மட்டும் ஹென்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதிவாகவில்லை. இதனால், பா.ஜ.,வினர் கோபமடைந்தனர்.பிரேத பரிசோதனை முடிந்ததும், நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்சில் வினய் உடல், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குஷால்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நேற்று காலை அவரது உடல் வந்தது. அங்கு குவிந்த பா.ஜ., தொண்டர்கள், வினய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், குடகு மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.உடல் அடக்கம்வினய் உடல் இருந்த மருத்துவமனையை சுற்றியும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, குஷால்நகரில் உள்ள டி.எஸ்.பி., அலுவலகம் அருகே பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் போராட்டம் நடந்தது.மைசூரு எம்.பி., யதுவீர், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் அங்கு குவிந்தனர். திடீரென டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை இரும்பு தடுப்பு வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸ், பா.ஜ.,வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து ஐந்து பஸ்களில் ஏற்றினர். இதையடுத்து வினய் உடல் அவரது சொந்த ஊரான கோனிமரூருக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.நேற்று இரவு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பா.ஜ., தலைவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். “வினய் தற்கொலை வழக்கில், எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது,” என, விஜயேந்திரா எச்சரிக்கை விடுத்துஉள்ளார்.பா.ஜ., தொண்டர் வினய் தற்கொலை குறித்து, உரிய விசாரணை நடக்கும். பா.ஜ.,வினர் சொல்கின்றனர் என்பதால், எங்கள் கட்சி எம்.எல். ஏ.,க்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது. சாவு வீட்டிலும் பா.ஜ., தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்.சித்தராமையா, முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ