மேலும் செய்திகள்
மைசூரு அரண்மனையில் சர்வதேச யோகா தினம்
11-Jun-2025
மைசூரு : ''மைசூரு அரண்மனை ஆணையத்தில் கொள்ளை நடக்கிறது. அரண்மனை நிர்வாகத்தை அரச குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது நல்லது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மைசூரு அரண்மனை ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது. அனைத்து இடங்களிலும், முதல்வர் சித்தராமையாவின் ஜால்ராக்களே நிரம்பியுள்ளனர். அரண்மனை திவால் ஆகிறது.முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில், அதிகாரிகள் யாருடைய பேச்சையும் கேட்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரண்மனை ஆணையத்துக்கு கே.எஸ்.எஸ்., அதிகாரியை நியமிக்கும்படி, 2013ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை உத்தரவு செயல்படுத்தவில்லை. அடமானம்
சித்தராமையாவின் ஆதரவாளரான அரண்மனை ஆணைய துணை இயக்குநர் சுப்ரமண்யா, யாருடைய பேச்சுக்கும் மதிப்பளிப்பது இல்லை. இவர் அரண்மனையை அடமானம் வைத்தாலும், ஆச்சரியப்பட முடியாது. இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கும், கொண்டு வந்துள்ளேன். இது பற்றி அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.மைசூரு அரண்மனை, உலக பிரசித்தி பெற்றது. இதுபோன்ற அரண்மனை, யாரோ ஒரு 'கலெக் ஷன் மாஸ்டர்' கையில் கிடைத்துள்ளது. அரண்மனை ஆணையத்தில் நடக்கும் முறைகேட்டை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மைசூரு தசரா திருவிழா முன்னேற்பாடு குறித்து, வரும் 26ம் தேதி உயர் மட்ட கமிட்டி கூட்டம் நடக்கவுள்ளது. அதிகாரிகள் முதல்வரை கணக்கிலேயே எடுக்கவில்லை. அரண்மனைக்கு சுப்ரமண்யாவே தலைவராக இருக்கிறார். அரண்மனை நிர்வகிப்பை அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். திவால்
முதல்வரின் தொகுதியில், 'முடா' பாழாகிவிட்டது. முதல்வரின் சீடர்களே அனைத்து இடங்களிலும் அமர்ந்துள்ளனர். அரண்மனை திவால் ஆகிவிட்டது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும்.அரசு துறைகளில் ஊழல் எல்லை மீறியுள்ளது. ஆனால் முதல்வர் சித்தராமையா, பா.ஜ., மீது குற்றஞ்சாட்டுகிறார். வீட்டுவசதி துறை ஊழல் குறித்து, அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர்.மாநிலத்தை சித்தராமையா ஏலம் விட்டுள்ளார். அனைத்து திட்டங்களையும், பெண்களுக்கு அளித்துள்ளனர். மதுபான விலையை உயர்த்தினர். இது பற்றி கேள்வி எழுப்பினால், குடிப்பதை குறைக்கும் நோக்கில், மது விலையை உயர்த்தியதாக கூறுகின்றனர். இதை நம்ப மக்கள் பைத்தியம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
11-Jun-2025