உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு முன்ஜாமின்

 பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு முன்ஜாமின்

பெங்களூரு: பலாத்கார வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணை மிரட்டிய வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும், 35 வயது பெண் அளித்த புகாரில், ரவிசங்கர் என்பவர் மீது, டில்லி சாணக்யபுரி போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணை மிரட்டியதாக, ஆர்.ஆர்.நகர், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா அவரது ஆதரவாளர்கள் கிரண் நாயுடு, லோகித், மஞ்சுநாத், லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யண்ணா ரெட்டி, லோஹித், எஸ்.ஐ., சந்திரசேகர் ஆகியோர் மீது, ஆர்.ஆர்.நகர் போலீசார், கடந்த 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். கைதில் இருந்து தப்பிக்க, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், முன்ஜாமின் கேட்டு முனிரத்னா மனு செய்தார். இம்மனு மீது, நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. முனிரத்னாவுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிமன்றம், பிணைத்தொகையாக 2 லட்சம் ரூபாய் செலுத்த, அவருக்கு உத்தரவிட்டது. சாட்சிகளை மிரட்ட கூடாது; பெங்களூரை விட்டு வெளியே செல்ல கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மனு மீதான அடுத்த விசாரணை நாளை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை