உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஞானேஷ்குமார் மூலம் பா.ஜ., வெற்றி அமைச்சர் சந்தோஷ் லாட் குற்றச்சாட்டு

 ஞானேஷ்குமார் மூலம் பா.ஜ., வெற்றி அமைச்சர் சந்தோஷ் லாட் குற்றச்சாட்டு

பெங்களூரு: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மூலம், மேற்கு வங்கம், அசாமில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதாக, அமைச்சர் சந்தோஷ் லாட் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கட்சி தொண்டர்கள், தலைவர்கள் உழைப்பின் மூலம் தாவணகெரே தெற்கு, பாகல்கோட் தொகுதிகளில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று உள்ளோம். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் ஆச்சரியம் என்னவென்றால், தமிழகத்தில் விஜய் கட்சி வெற்றி பெற்றது தான். ஆனாலும் கட்சி துவங்கிய இரண்டு ஆண்டுகளில், ஆட்சிக்கு வந்ததற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மூலம், மேற்கு வங்கம், அசாமில் பா.ஜ., வெற்றி பெற்று உள்ளது. இதனால் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை ஞானேஷ் குமாருக்கு தான் கொடுக்க வேண்டும். அவர் பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ., எதிர்பாராத வெற்றியை பெற்று வருகிறது. பா.ஜ.,வுக்காக தீவிரமாக உழைக்கும் அவருக்கு வாழ்த்துகள். எல்லாவற்றிக்கும் ஒரு காலம் வந்தே தீரும். மத்திய பா.ஜ., அரசுக்கு வலிமை, தைரியம் இருந்தால் ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கட்டும். தேர்தல் ஆணையம் தேவையே இல்லை. அப்படி செய்தால் தேர்தலில் நடக்கும் முறைகேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கேரளாவில் நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். ஆனால், இதன் பின்னணியை பார்க்க வேண்டும். பா.ஜ., ஒவ்வொரு மாநிலத்தையும் தேர்வு செய்து சதி செய்கின்றனர். நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !