உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாயை விமானத்தில் அழைத்து சென்ற பார்வையற்ற கிரிக்கெட் வீராங்கனை

 தாயை விமானத்தில் அழைத்து சென்ற பார்வையற்ற கிரிக்கெட் வீராங்கனை

பெங்களூரு: கடந்தாண்டு பார்வையற்றோருக்கான டி-20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்த அணி கேப்டன் தீபிகா, தனது தாயாரை முதன் முறையாக விமானத்தில் அழைத்து சென்றதை பூரிப்புடன் பதிவிட்டு உள்ளார். கடந்தாண்டு இலங்கையில் நடந்த உலக பார்வையற்றோர் டி--20 மகளிர் கிரிக்கெட் போட்டியில், கர்நாடகாவை சேர்ந்த தீபிகா தலைமையில் இந்திய அணி, கோப்பையை வென்றது. துமகூரு மாவட்டம், சிராவின் சிக்கதிம்மனஹள்ளி கிராமத்தில் கூலி தொழிலாளிகள் தம்பதிக்கு, மகளாக பிறந்தவர் தீபிகா. பிறவியிலேயே ஒரு கண் குறைபாட்டுடன் பிறந்தார். தனது குறையை, சாதனையாக மாற்ற விரும்பிய தீபிகா, பார்வையற்றோர் கிரிக்கெட்டை தேர்வு செய்தார். கடந்தாண்டு இலங்கையில் நடந்த உலக மகளிர் பார்வையற்றோர் டி20 போட்டியில், இந்திய அணியை வழிநடத்தி, கோப்பையை பெற்றுத்தந்தார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் அவரை பாராட்டினர். இந்நிலையில், விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற தன் கனவு நிறைவேறியது. அதுபோன்று, தனது தாயாரையும் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதன்படி தனது தாயாருடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், 'என் வாழ்க்கைக்கு சிறகுகள் கொடுத்த அவருக்கு, இன்று அவருக்கு ஆகாயத்தில் சிறகுகள் தந்துள்ளேன்' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு உள்ளார். இவரின் பதிவை, பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை