உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு 31 மாவட்டத்தில் உறைவிட பள்ளி

தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு 31 மாவட்டத்தில் உறைவிட பள்ளி

பெங்களூரு: ''பட்ஜெட்டில் அறிவித்தது போல், மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், தெரிவித்தார். சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: காங்., - பணகர்: தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு, எத்தனை உறைவிட பள்ளிகள் அமைக்கும் நோக்கம் உள்ளது. ஹாவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தாலுகா, நிட்டூர் கிராமத்திலும் ஒரு உறைவிட பள்ளியை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அமைச்சர் சந்தோஷ் லாட்: மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உறைவிட பள்ளிகள் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் நிலுவையில் உள்ளன. ஹாவேரி மாவட்டத்தில், பேடகி தாலுகாவின் ஹிரே அணகி கிராமத்தில், 34.45 கோடி ரூபாய் செலவில், உறைவிட பள்ளி கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. பல எம்.எல்.ஏ.,க்களும், அவரவர் தொகுதிகளில் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உறைவிட பள்ளிகளை அமைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். வரும் நாட்களில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஹாவேரியின் நிட்டூர் கிராமத்திலும் ஒரு பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை