உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது 

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது 

மாண்டியா : மனநலம் பாதித்த 19 வயது இளம்பெண்ணை, பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார். மாண்டியா, நாகமங்களா காரியாக்தனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் தம்பதிக்கு 19 வயதில் மகள் உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர். வேலை விஷயமக, நேற்று முன்தினம் இரவு தம்பதி, மாண்டியாவுக்கு சென்றனர். இதனால், இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன், தம்பதியின் வீட்டிற்கு வந்தார். இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இளம்பெண் அலறினார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் வசிக்கும், இளம்பெண்ணின் பாட்டி அங்கு வந்தார். இளம்பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம்பெண்ணை காப்பாற்ற முயன்றார். கோபம் அடைந்த சிறுவன், பாட்டியை தாக்கியதுடன் ஜாதியை சொல்லி திட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இரவில் வீடு திரும்பிய தம்பதிக்கு, மகள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிந்தது. சிறுவன் மீது நாகமங்களா ரூரல் போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராமத்தில் உள்ள, பாழடைந்த வீட்டில் பதுங்கி இருந்த சிறுவனை, நேற்று காலை கைது செய்தனர். அவரை நீதிபதி வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். பின், மைசூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ