மேலும் செய்திகள்
ஸ்ரீமகாலட்சுமி நகைக் கடை திறப்பு
11-Jun-2026
பெங்களூரு: சைக்கிளில் சென்ற சிறுவனை நாய் கடித்தது தொடர்பாக, நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. பெங்களூரின், மஹாதேவபுராவில் வசிக்கும், 12 வயது சிறுவன், இரண்டு நாட்களுக்கு முன், தன் வீட்டு முன் உள்ள சாலையில், சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்த, ராட் வீலர் ரக வளர்ப்பு நாய், சிறுவன் மீது பாய்ந்தது. சிறுவன் வேகமாக சென்றும் விடாமல், விரட்டி சென்று காலில் பலமாக கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை, பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். மகனின் இந்த நிலைக்கு நாயின் உரிமையாளரே காரணம். ராட் வீலர் போன்ற அபாயகரமான இனத்தை சேர்ந்த நாயை கட்டுப்படுத்தி அவர்கள் வைக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மஹதேவபுரா போலீஸ் நிலையத்தில், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்படி, நாயின் உரிமையாளர் மீது, போ லீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மஹாதேவபுராவில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகம். இவைகளை கட்டுப்படுத்தும்படி, பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. சாலைகளில் நடக்கவே அச்சமாக உள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெரு நாய்களிடம் இருந்து, மக்களை பாதுகாக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
11-Jun-2026