திறந்திருந்த சாக்கடையில் விழுந்த சிறுவன் படுகாயம்
பெங்களூரு: திறந்திருந்த சாக்கடையில் விழுந்து பள்ளி சிறுவன் படுகாயமடைந்தான். பெங் களூரின் பல இடங்களில், ஜி.பி.ஏ., சார்பில் சாலைப்பணி மற்றும் சாக்கடை பணிகள் நடக்கின்றன. பணிகள் நடக்கும் இடங்களில், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது இல்லை. இது, அசம்பாவிதங்களுக் கு காரணமாகிறது. சர்வக்ஞநகரின், கோவிந்தபுராவில் உள்ள பள்ளி எதிரே சாக்கடை மூடி திறந்துள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்க தடுப்போ அல்ல து அறிவிப்பு பலகையோ வைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் சிறார்கள், இந்த வழியாகவே செல்கின்றனர். பள்ளி சிறுவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை சாக்கடை வழியாக நடந்து செல்லும் போது, நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்தான். இதைக்கண்ட அப்பகுதியினர், காப்பாற்றியதால், லேசான காயங்களுடன் சிறுவன் உயிர் தப்பினான். இச்சம்பவத்துக்கு ஜி.பி.ஏ.,வின் அலட்சியமே காரணம் என, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிறுவன் சாக்கடையில் விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்துள்ளனர்.