மேலும் செய்திகள்
காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் கைது
19-Jun-2025
உடுப்பி : திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.உடுப்பி அருகே கொல்லல்கிரி லட்சுமிநகரை சேர்ந்தவர் சஞ்சய் கார்கேரா, 28; தனியார் நிறுவன ஊழியர். இவரும், 25 வயது இளம்பெண்ணும் இரண்டு ஆண்டாக காதலித்தனர். சமீபத்தில் சிக்கமகளூருக்கு சுற்றுலா சென்றனர். திருமணம் செய்வதாக கூறி காதலியுடன், சஞ்சய் உல்லாசமாக இருந்து உள்ளார்.இந்நிலையில் இளம்பெண்ணின் காதல் விவகாரம் பற்றி தெரியாத பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, சஞ்சயிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். அவர் மீது உடுப்பி டவுன் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். சஞ்சய் நேற்று கைது செய்யப்பட்டார்.
19-Jun-2025