உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்., 12ல் பிரம்மோத்சவம் துவக்கம்

 ராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிப்., 12ல் பிரம்மோத்சவம் துவக்கம்

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் பிரம்மோத்சவ விழா, வரும், 12ம் தேதி முதல், 22 ம் தேதி வரை நடக்கிறது. கர்நாடக அரசின், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது, ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ராமலிங்கேஸ்வர சுவாமி கோவில். இக்கோவிலின், 63ம் ஆண்டு பிரம்மோற்சவத்தை, வரும், 12ம் முதல், 22ம் தேதி வரை நடத்த, உற்சவ குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். வரும் 12ல் அங்குரார்பணம், நந்தி வாகன உற்சவம்; 13ல் சிம்ம வாகன உற்சவம்; 14ம் தேதி காலை 10:00 மணிக்கு கல்யாண உற்சவம், இரவு கஜ வாகன உற்சவம். 15ம் தேதி மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகள், பக்தி பஜனைகள் நடைபெறும். இறுதியாக, 22ம் தேதி ஷயனோற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !