மேலும் செய்திகள்
சட்டசபை துளிகள்
5 hour(s) ago
கிரைம் கார்னர்
5 hour(s) ago
பழங்குடியினருக்கு ஆணையம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை
5 hour(s) ago
பெலகாவி: பிரிஜ் வெடித்து ஆறு பேர் உயிரிழந்த விபத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். பெலகாவி மாவட்டம், சாவத்தஹள்ளியை சேர்ந்தவர் கஜானன் தாமோன், 65. இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு திடீரென பிரிஜ் வெடித்து சிதறி வீடு முழுதும் தீப்பரவியது. கஜானன், அவரது மனைவி சாரதா, 45, மகன் ரோஷன், 21, மகள்கள் கங்கா, 25, பிரியா, சாரதாவின் அக்கா பாரதி ராஜாராம், 50, ஆகிய, 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். முதலில் இந்த விபத்துக்கு மின்கசிவே காரணம் என கூறப்பட்டது . பெலகாவி மார்க்கெட் போலீசார், விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு மு ன், மர்ம நபர் ஒருவர், கஜானனின் வீட்டை நோக்கி பக்கெட்டை எடுத்து செல்வதும்; சில நிமிடங்களில் அந்த பக்கெட் இல்லாமல் தலைதெறிக்க அங்கிருந்து ஓடுவதும் தெரிய வந்தது. அந்த மர்ம நபர் யார்; அவர் கையில் எடுத்து சென்ற பக்கெட்டில் என்ன இருந்தது; விபத்து நடந்த நேரத்தில் அவர் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர். எனவே, இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago