மேலும் செய்திகள்
பைக்குடன் வாலிபர் மாயம்
04-Oct-2025
பெங்களூரு: நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழந்தனர். பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா லே - அவுட்டில் வசித்தவர் ஜெகந்நாத், 10. இவரது தம்பி சஞ்சய், 8. இவர்கள் வீட்டின் அருகிலேயே ஏரி உள்ளது. நேற்று காலையில் ஏரி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆழம் தெரியாமல் நீரில் இறங்கி விளையாட முற்பட்டபோது, நீரில் மூழ்கினர். இதை பார்த்த சிலர், சிறுவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஏரியில் இருந்த மகன்களை வெளியே கொண்டு வந்தனர். அதற்குள் ஜெகந்நாத் உயிரிழந்தார். சஞ்சய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
04-Oct-2025