உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆடுகளை குளிப்பாட்டும் போது ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

 ஆடுகளை குளிப்பாட்டும் போது ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

ஹாசன்: ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவின், ஜாவகல் கிராமத்தில் வசித்தவர் இம்ரான், 15. பத்தாம் வகுப்பு படித்தார். இவரது தம்பி யாசின், 13. எட்டாம் வகுப்பு மாணவர். ஆண்டு தேர்வு எழுதியுள்ள இவர்கள், கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தனர். தாங்கள் வளர்க்கும் ஆடுகளை குளிப்பாட்டும் நோக்கில், அண்ணனும், தம்பியும் நேற்று முன்தினம் மாலை, கிராமத்திற்கு அருகேயுள்ள ஏரிக்கு சென்றனர். ஆடுகளை குளிப்பாட்டும் போது, சகோதரர்களில் ஒருவர் கால் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றவரும் நீரில் மூழ்கினார். அங்கிருந்த ஆடு மேய்ப்பவர்கள், சகோதரர்களை காப்பாற்ற முயற்சித்தும் பயன் இல்லை. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், இருவரின் உடல்களை வெளியே எடுத்தனர். ஜாவகல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை