உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் தடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

 பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் தடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

பெங்களூரு: உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல் ஜாதி மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க, கர்நாடகா ரோஹித் வெமுலா மசோதாவுக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர் நாடகாவில் உயர் கல்வி நிறுவனங்களில், பட்டியல் ஜாதி மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க, 'ரோஹித் வெமுலா' சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கடந்த ஆண்டு முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினா ர். இதையடுத்து, கர்நாடகா ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கர்நாடகா ரோஹித் வெமுலா மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களின் நலனை பாதுகாக்கும். மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஜாதி ரீதியான மோதல்களை தடுக்க வழிவகை செய்யும். பட்டியலின மாணவர்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். அதே சமயம், பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்குவதை மசோதா வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் மீது கல்வி நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத கல்வி நிறுவனங்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், மாணவர்களிடம் நடக்கும் ஜாதி ரீதியான மோதல்களை தடுக்க ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இதில், உதவி பேராசிரியர் பதவிக்கு நிகராக உள்ள நான்கு பேர்; இரண்டு பட்டியல் ஜாதி மாணவர்கள் என, மொத்தம் ஆறு பேர் குழுவில் இருப்பர். இக்குழுவிற்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த உதவி பேராசிரியரே தலைமை தாங்குவார் என்பதை மசோதா வலியுறுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை