உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2,500 ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவான ஆசிரியர் மீது வழக்கு

2,500 ஆபாச வீடியோ விவகாரத்தில் தலைமறைவான ஆசிரியர் மீது வழக்கு

கோனனகுண்டே: மொபைல் போனில் 2,500 ஆபாச வீடியோக்கள் வைத்திருக்கும் விவகாரத்தில், தலைமறைவாக உள்ள தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. கே ரளாவைச் சேர்ந்தவர் மேத்யூ, 35. பெங்களூரு, பன்னர்கட்டா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்கிறார். கிரிக்கெட் பயிற்சியாளராகவும் உள்ளார். மேத்யூவுக்கும், பள்ளியில் படிக்கும் சிறுமியின் தாயான 33 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கணவரை ஏற்கனவே விவாகரத்து செய்திருந்த பெண், மேத்யூவை காதலித்தார். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த பெண் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். திடீரென அந்த பெண்ணை கைவிட்டு, மேத்யூ தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மகளிர் ஆணையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். 'மேத்யூ மொபைல் போனில் சிறுமியர், பெண்கள் என 2,500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கின்றன. இதுபற்றி கேட்டதால் கர்ப்பிணியான என்னை கைவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார்' என, புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது. இதையடுத்து, பெண் அளித்த புகார் தொடர்பாக மேத்யூ மீது கோனனகுண்டே போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடுகின்றனர். இதற்கிடையில் சில பெண்களுடன் மேத்யூ நெருக்கமாக இருக்கும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகின. மனைவி அளித்த புகார் பற்றி, மேத்யூ நேற்று வெளியிட்ட வீடியோவில், 'நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை. பெற்றோர் நிலத்தை விற்பனை செய்ய, சொந்த ஊருக்கு வந்துள்ளேன். என்னை பற்றி மனைவி ஏன் அவதுாறு பரப்புகிறார் என்று தெரியவில்லை. அவரை பிரிந்து செல்லும் எண்ணமும் எனக்கு இல்லை. அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். விரைவில் பெங்களூரு வந்து உண்மையை கூறுகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி