உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாடோடி ஆணைய தலைவியை மிரட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

நாடோடி ஆணைய தலைவியை மிரட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

பெங்களூரு: நாடோடி மேம்பாட்டு ஆணைய தலைவி பல்லவிக்கு, கொலை மிரட்டல் விடுத்த, பா.ஜ., தொண்டர்கள் 7 பேர் மீது, வழக்கு பதிவாகி உள்ளது.கர்நாடக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட நாடோடி மேம்பாட்டு ஆணையம் சார்பில், கடந்த 5ம் தேதி பெங்களூரு காந்தி பவனில், நாடோடி மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆணைய தலைவி பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., தொண்டர்கள் லோகித், வீரேஷ், சிவு, பசவராஜ், சுபாஷ், லோகேஷ், சாந்தகுமார் ஆகியோர், பல்லவியை பார்த்து 'நீங்கள் தலைவியாக இருந்து ஒரு பயனும் இல்லை. நாடோடி மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை' என்றனர். இதற்கு பல்லவி எதிர்ப்பு தெரிவிக்கவே, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பல்லவியை, ஏழு பேரும் சூழ்ந்து கொண்டனர்.இந்நிலையில், பிரபாவதி என்பவர், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், பா.ஜ., தொண்டர்கள் மீது நேற்று புகார் செய்தார். 'பல்லவியின் சேலையை பிடித்து இழுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறப்பட்டு இருந்தது. இதன்படி, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை