உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.67.50 லட்சம் மோசடி தயாரிப்பாளர் மீது வழக்கு

ரூ.67.50 லட்சம் மோசடி தயாரிப்பாளர் மீது வழக்கு

பெங்களூரு: நடிகர்கள் சிவராஜ்குமார், கணேஷை வைத்து சினிமா தயாரிப்பதாக கூறி நிதி நிறுவனம் நடத்தும் பெண்ணிடம், கடன் வாங்கி 67.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த, கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சூரப்பா பாபு மீது வழக்குப் பதிவாகி உள்ளது.கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சூரப்பா பாபு. இவர் சூரப்பா, பிரித்வி, கடம்பா, கொடிகொப்பா உட்பட பல கன்னட திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், தலக்காவிரி லே -- அவுட்டில் நிதி நிறுவனம் நடத்தும் லட்சுமி என்பவரை, சூரப்பா பாபு சந்தித்தார்.நடிகர்கள் சிவராஜ்குமார், கணேஷை வைத்து சினிமா தயாரிக்க உள்ளேன். இதற்கு 92.50 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுகிறது என்று லட்சுமியிடம், சூரப்பா பாபு கேட்டு உள்ளார்.இதனால் பல தவணைகளில் லட்சுமியும் பணம் கொடுத்து உள்ளார். ஆனால் சிவராஜ்குமார், கணேஷை வைத்து படம் எடுக்கவும் இல்லை. கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை. பலமுறை லட்சுமி பணம் கேட்டதால் 25 லட்சம் ரூபாய் மட்டும் சூரப்பா பாபு கொடுத்து இருந்தார்.மேலும் 67.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இதனால் அம்ருதஹள்ளி போலீசில் நேற்று முன்தினம் லட்சுமி புகார் செய்தார். சூரப்பா பாபு மீது நேற்று வழக்கு பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை