மேலும் செய்திகள்
மொபைல் போன் பறிமுதல்; இரு கைதிகள் மீது வழக்கு
04-Apr-2026
பல்லாரி: பீடி வாங்கி தர மறுத்ததால், சிறை வார்டனை தாக்கிய கைதிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. பல்லாரி டவுன் புருஸ்பேட் பகுதியில் மாவட்ட மத்திய சிறை உள்ளது. இங்கு வார்டனாக இருப்பவர் அசோக் ஹொசமணி, 40. நேற்று காலை பணியில் இருந்தார். கைதிகள் அல்தாப், ரஷீத் உட்பட 5 பேர், அசோக்கிடம் சென்று தங்களுக்கு பீடி வாங்கி தரும்படி கேட்டனர். அவர் மறுத்தார். கோபம் அடைந்த கைதிகள், அசோக்கை தாக்கி னர். சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் அளித்த புகாரில், கைதிகள் 5 பேர் மீது புருஸ்பேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
04-Apr-2026