உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்சேபனைக்குரிய பேச்சு பசவராஜ் மீதான வழக்குகள் ரத்து

ஆட்சேபனைக்குரிய பேச்சு பசவராஜ் மீதான வழக்குகள் ரத்து

பெங்களூரு: விவசாயிகள், கோவில் நிலங்களை வக்ப் வாரியம் அபகரிப்பதாக ஆட்சேபனைக்குரிய வகையில் பேசிய, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளையும், கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விவசாயிகள், கோவில்கள் நிலங்கள், தங்களுக்கு சொந்தம் என வக்ப் வாரியம் கடந்தாண்டு கூறி வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2024 நவம்பரில் பா.ஜ., போராட்டம் நடத்தியது.ஹாவேரியில் பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த போராட்டத்தில் அவர் பேசுகையில், 'விவசாயிகளின் நிலங்களை, வக்ப் வாரியம் அபகரிக்க முயற்சிக்கிறது. நீங்கள் சாவனுாரில் இருந்து கல்லை வீசி எறிந்தால், அது விழும் இடம் வக்ப் வாரியத்தின் நிலத்தில் விழும்' என்று பேசியிருந்தார்.இவரின் பேச்சுக்கு எதிராக, சாவனுார், ஷிகாவி போலீஸ் நிலையங்களில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பசவராஜ் பொம்மை மனுத் தாக்கல் செய்திருந்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கிருஷ்ண குமார், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முந்தைய உதாரணங்களை சுட்டிக் காட்டி, பசவராஜ் பொம்மை மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை