உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காவிரி ஆரத்தி தேதி மாற்றம்

காவிரி ஆரத்தி தேதி மாற்றம்

மாண்டியா: ‘‘ தசராவை ஒட்டி, கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காவிரி ஆரத்தி, தேதி தவிர்க்க முடியாத காரணத்தால் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது,’’ என, சிறிய மற்றும் நடுத்தர நீர் பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார். மாண்டியாவில் அவர் நேற்று அளித்த பேட்டி: கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் பூங்காவில், அக்., 11 முதல், 16ம் தேதி வரை காவிரி ஆரத்தி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால், அக்., 16 முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும். அதுபோன்று பிருந்தாவனத்தில் நடக்கவுள்ள சமய வழிபாட்டு சேவைகள், கலாசார நிகழ்ச்சிகளின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது. காவிரி ஆரத்தி, கலாசார நிகழ்ச்சிகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இதை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள், சுற்றுலா பயணியர் பெருளமவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை