மேலும் செய்திகள்
விஜய் - அண்ணாமலை: கலங்கும் கூடாரங்கள்!
09-Jun-2026
பெங்களூரு: மயில் இறகுகளை பயன்படுத்தி, 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டதால், பிக்பாஸ் பிரபலம் நிவேதிதா கவுடா சர்ச்சையில் சிக்கி உள்ளார். கன்னட பிக்பாஸ் போட்டியாளரான நிவேதிதா கவுடா, இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பிரபலம் கிஷனுடன் இணைந்து சமீபத்தில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டார். இருவரும் மயில் இறகுகளால் செய்யப்பட்ட உடைகளை அணிந்து கொண்டு நடனமாடுவது வீடியோவில் தெரிந்தது. மயில் இறகுகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவர் மீதும் சமூக ஆர்லவர் தினேஷ் கல்லஹள்ளி, ககலிபுரா வன அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். புகாரில், 'பாதுகாக்கப்பட்ட பறவை இனமான மயிலின் இறகுகளை பயன்படுத்தி ஆடைகள் செய்வது சட்டவிரோதமானது. வீடியோ எடுப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், வனத்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
09-Jun-2026