மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய மூவர் கைது
26-Mar-2025
ஆலப்புழா: கேரளாவில் ஆலப்புழா பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதி யில் கண்காணிப்பில் ஈடுபட்ட சுங்கத்துறையினர் நேற்று ஆலப்புழா அருகேயுள்ள ஓமனப்புழா கடற்கரை சாலையில் பெண் உட்பட இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மூன்று பாக்கெட் உயர் தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய்.இதையடுத்து, கஞ்சா கடத்திய சென்னையைச் சேர்ந்த தஸ்லிமா சுல்தானா, 41, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மன்னான்சேரியைச் சேர்ந்த பைரோஸ், 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடத்திய சுங்கத்துறையினர் கூறியதாவது: சுல்தானாவுக்கு கிறிஸ்டியானா என்ற வேறு பெயரும் உண்டு. தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்டியானா, கேரளாவை மையமாகக் கொண்டு கஞ்சா கடத்தி விற்பனை செய்து வருகிறார். இவர், கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர்கள் சிலருக்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்களுடன் கிறிஸ்டியானா, 'வாட்ஸாப்' வாயிலாக பேசும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே நடிகர்கள் யார் என்பதை தெரிவிப்போம். இதை உறுதி செய்யும் வரை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் பெயர்களை தெரிவிக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
26-Mar-2025