மேலும் செய்திகள்
கர்நாடக முதல்வராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார்
03-Jun-2026
பெங்களூரு: மேல்சபை தேர்தல் முடிந்த கையோடு, ஆந்திராவின் பிரசித்தி பெற்ற திருத்தலமான திருப்பதி திருமலைக்கு செல்ல, முதல்வர் சிவகுமார் திட்டமிட்டுள்ளார். சிவகுமார் முதல்வராவதற்கு முன், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்திருந்தார். அவரது வேண்டுதல் பலித்துள்ளது. முதல்வராக பதவியேற்றுள்ளார். எனவே, வேண்டுதலை நிறைவேற்ற தயாராகிறார். மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த பின், இன்று மாலை விமானத்தில், முதல்வர் சிவகுமார் தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இன்றிரவு திருமலையில் தங்குவார்; நாளை அதிகாலை வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்வார்; சிறப்பு பூஜைகள் நடத்துவார். அதன்பின் பெங்களூருக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரான பின், சிவகுமார் ஒவ்வொரு கோவிலாக தரிசனம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன், பிரசித்தி பெற்ற காடு சித்தேஸ்வரா மடத்துக்கு சென்று, சி த்தேஸ்வரரை தரிசனம் செய்தார்.
03-Jun-2026