மேலும் செய்திகள்
பெலகாவியை விட்டுக் கொடுக்க முடியாது: சித்தராமையா
01-Nov-2025
கன்னட ராஜ்யோத்சவா விருதுகள் அறிவிப்பு
31-Oct-2025
பெங்களூரு: 'கர்நாடகாவில் அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதற்காக, மைசூரில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர திரைப்பட நகரம் உருவாக்கி வருகிறோம்' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கன்னட ராஜ்யோத்சவா தினமான நேற்று, முதல்வர் சித்தராமையா, தன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவு: தொழில்நுட்பத்தின் வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்கள் எடுத்தால், அது சமூகத்திற்கு நல்லது. சினிமா துறையும் முன்னேற்றம் காணும். மனித விருப்பங்களை விதைக்கும் கன்னட படங்கள், உலகத்தரத்தில் தயாரிக்கப்பட வேண்டும். கன்னட மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்து வாழ்பவர்கள், கன்னட மொழியில் பேச வேண்டும் என்பது எங்கள் விருப்பம். மாநிலம் முழுதும் உள்ள அனைத்து அலுவலகங்கள், கடைகள், பல்வேறு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தோம். பிற மொழியை மதிப்போம்; கன்னடத்தையும், கன்னட பூமியையும் நேசிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
01-Nov-2025
31-Oct-2025