| ADDED : நவ 14, 2025 05:08 AM
பெங்களூரு: நீர்ப்பாசனத்துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் எழுதிய, 'நீரின ஹெஜ்ஜே' புத்தகம், இன்று வெளியிடப்படுகிறது. முதல்வர் சித்தராமையா புத்தகத்தை வெளியிடுகிறார். இது குறித்து, துணை முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வர் சிவகுமார், 'நீரின ஹெஜ்ஜே' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் கர்நாடக நீர் வளங்களின் வரலாறு, சவால்கள் உட்பட நீர் வளம் தொடர்பான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மாநில, தேசிய மற்றும் சர்வதேச நீர் விவாதங்கள், ஒப்பந்தங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், நீர்ப்பாசன திட்டங்கள், பிரச்னைகள், தீர்வுகள் குறித்து புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த புத்தகம், நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. பெங்களூரு, விதான் சவுதாவின், மாநாடு ஹாலில் நடக்கவுள்ள விழாவில், முதல்வர் சித்தராமையா புத்தகத்தை வெளியிடுவார். இந்த விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் மோகன் காதரகி, அமைச்சர்கள் ஹெச்.கே.பாட்டீல், என்.எஸ்.போசராஜு முக்கிய விருந்தினர்களாக பங்கேற்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.