புதிய இல்லத்தில் கட்சியினருக்கு முதல்வர் இன்று மதிய விருந்து
பெங்களூரு: அதிகாரபூர்வ அரசு இல்லமான கங்காவில், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கு, முதல்வர் சிவகுமார் இன்று மதிய உணவு விருந்து அளிக்கிறார். பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள, குமாரகிருபா வளாகத்தில் 160 ஆண்டுகள் பழமையான, பாரம்பரிய கட்டடத்தின் ஒரு பகுதி, முதல்வர் சிவகுமாருக்காக அரசு இல்லமாக புனரமைக்கப்பட்டது. ‘கங்கா’ என பெயரிடப்பட்ட இல்லத்தில், கடந்த 16ம் தேதி சிவகுமார் அதிகாரபூர்வமாக குடியேறினார். புனரமைப்பு பணிக்காக அதிக பணம் செலவு செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறின. இந்நிலையில், 224 எம்.எல்.ஏ.,க்கள், 75 எம்.எல்.சி.,க்கள், 28 எம்.பி.,க்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட, அரசியல் தலைவர்களுக்கு, கங்கா இல்லத்தில் இன்று சிவகுமார், மதிய உணவு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்கும்படி அனைவரும் கடிதம் அனுப்பியுள்ளார்.