மேலும் செய்திகள்
சினி கடலை
23-May-2025
* ஒன்றன் பின் ஒன்றாகநடிகைகள் ராஷ்மிகா மந்தண்ணா, ஸ்ரீலீலாவை தொடர்ந்து, கன்னட நடிகை சஞ்சனா ஆனந்தும், தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். கன்னடத்துடன், தெலுங்கிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ள இவர், தற்போது மற்றொரு படத்தில் வாய்ப்பு பெற்றுள்ளார். படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இது தவிர தழிழ் படங்களிலும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. சஞ்சனா கதை கேட்டு வருகிறார். விரைவில் இவரை தமிழ் படங்களிலும் பார்க்கலாம். இவரது நடிப்பில் எக்கா, ஹயக்ரிவா, முதோல் ஆகிய கன்னட திரைப்படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக, திரைக்கு வர தயாராகிறது.* திருமணம் தள்ளி வைப்புஇளம் நடிகையும், இயக்குனருமான ரஞ்சனி ராகவன், படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டு, தன் வருங்கால கணவர் சாகர் பரத்வாஜுடன் சுற்றுலா கிளம்பி உள்ளார். இவர்கள் நீண்ட கால நண்பர்கள், தற்போது திருமணம் செய்து கொள்ளவும் தயாராகின்றனர். சாகர் பரத்வாஜ், தேசிய வங்கியில் பணியாற்றுகிறார். இவருடன் வெளிநாட்டு சுற்றுலாவில் உள்ளார். இவருடன் எடுத்த போட்டோக்களை, சோஷியல் மீடியாவில் 'அப்லோட்' செய்துள்ளார். ரஞ்சனி ராகவன், பல படங்களை ஒப்புக்கொண்டுள்ளார். அதை முடித்து கொடுக்க வேண்டும். எனவே இரண்டு ஆண்டுகள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இதற்கிடையே படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.* குழந்தை பெற்ற பின்னும்...லவ் மாக்டெய்ல் இணைந்து நடித்த மிலனா நாகராஜ், கிருஷ்ணா பரஸ்பரம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2024ன் செட்பம்பர் 5ம் தேதி, தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகள் வந்த பின், இவர்களின் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்துள்ளது. குழந்தை பெற்ற பின்னும், மிலனாவுக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. நல்ல கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். மகளை கவனிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார். தன் அழகு மகளின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.* மாடல் அழகிநடிகர் கார்த்திக் மகேஷ் நடிப்பில், சிம்பிள் சுனி இயக்கத்தில் தயாராகும் ரிச்சி ரிச் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்து நாயகனை பற்றிய கதையாகும். அடுத்தகட்ட படப்பிடிப்பை துவக்க, ஏற்பாடு நடக்கிறது. படத்துக்கு நாயகியை தேடி வருகின்றனர். அம்ருதா அய்யங்கார், ஷான்வி ஸ்ரீவாத்சவிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் ஒருவர், நாயகியாகும் வாய்ப்புள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், நடிப்புக்கு திரும்பிய ஷான்வி ஸ்ரீவாத்சவ், அமெரிக்கா அமெரிக்கா 2 படத்தில் நடித்து முடித்தார். அம்ருதா அய்யங்கார் பாதர் படப்பிடிப்பை முடித்துள்ளார். ரிச்சி ரிச் படத்தில் மாடல் அழகி ஆயிஷா, கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.* திருப்பு முனைபகத் ராஜ் இயக்கத்தில், பிரவீன் நாயகனாக நடித்துள்ள, டானி திரைப்படம், நேற்று திரைக்கு வந்தது. போலீஸ் நிலையத்தில் நடக்கும் ஒரு வழக்கை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. நான்கு கதாபாத்திரங்களை சுற்றிலும் கதை நகர்கிறது. தந்தை, மகன், அண்ணன், தங்கை இடையிலான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நாடக பின்னணியில் இருந்து வந்த பிரவீன், நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என, எதிர்பார்க்கிறார். சதீஷ் சந்திரா, மானசா ஹொள்ளா உட்பட, பலர் நடித்துள்ளனர்.* இரட்டிப்பு குஷி கன்னடத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த நடிகை நிகிதா சாமிக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. தற்போது அவரது நடிப்பில் முதுடித அலெகளு, கங்கா கவுரி, எஸ் சைலன்ஸ் உட்பட, ஐந்து படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. டகீலா திரைக்கு வந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் குஷியில் திளைத்துள்ளார். இதற்கிடையே கர்நாடக திரைப்பட அகாடமி உறுப்பினராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டிப்பு குஷி அடைந்துள்ளார். அவருக்கு எதிர்பாராமல் பதவி தேடி வந்துள்ளது.
23-May-2025