மேலும் செய்திகள்
சினி கடலை
23-May-2025
சினிமாவுக்கு ஈர்க்க போட்டிபடக்குழுவினர் தங்களின் திரைப்படங்களை காண, மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க, பல விதமான வழிகளை கையாள்கின்றன. மாதொந்து ஹேளுவே திரைப்பட குழுவினரும், புதுமையான முறையை கையாண்டனர். படக்குழுவினர் கூறுகையில், 'படத்தின் டிரெய்லர் வெளியிடுவதற்கு முன், போட்டி ஏற்பாடு செய்தோம். நாயகன், நாயகியின் வசனத்தை மியூட் செய்து, அவர்கள் என்ன பேசினர் என்பதை ஊகிக்கும்படி கூறப்பட்டது. இதில் பங்கேற்று சரியான பதில் அளித்த ஐந்து பேருக்கு, தலா 5,000 ரூபாய் வீதம் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியின் போது பரிசளிக்கப்பட்டது. இந்த திரைப்படம், இம்மாதம் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது. ஹூப்பள்ளி நாயகன், மைசூரு நாயகி இடையிலான காதல் கதை கொண்டது' என்றனர்.பெருமைநடிகை தன்யா ராம்குமார், முந்தைய ஆண்டு பிசியாக இருந்தார். நடப்பாண்டு சவுகிதார் திரைக்கு வர தயாராகிறது. கதை குறித்து, அவரிடம் கேட்ட போது, ''படத்தில் பொறுப்பான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நாயகனின் போராட்டத்துக்கு தோள் கொடுக்கும், அவரது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குநர் சந்திரசேகர், என் கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்துள்ளார். மூத்த நடிகர் சாய் குமாருடன் நடித்தது, பெருமையான விஷயமாகும். அவரது படங்களை பார்த்து வளர்ந்த நான், படப்பிடிப்பு செட்டில் அவரது ஒழுங்கை கற்றுக்கொண்டேன். மக்களின் மனதில் இடம் பிடிக்கும் படங்களில் நடிப்பது, என் விருப்பம்,'' என்றார்.இலவச ஆட்டோ சர்வீஸ்இயக்குநர் சத்ய பிரகாஷ் இயக்கி, நடிக்கும் எக்ஸ் அண்ட் ஒய் திரைப்படம், விரைவில் திரைக்கு வர தயாராகிறது. இது குறித்து, அவர் கூறுகையில், ''படத்தில் நான் ஆட்டோ ஒட்டுநராக நடித்துள்ளேன். கர்ப்பிணியர், மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்து செல்லும் பல ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போதும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பலனை எதிர்பார்க்காமல், விபத்துக்குள்ளானவர்களையும், அவசர சூழ்நிலையில் இருப்பவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில், நான் நடக்கிறேன். மற்றவருக்கு உதவும் எண்ணம் இருப்பவர்களால், உலகம் இயங்குகிறது. இந்த படம் நல்ல கருத்துகள் கொண்டது,'' என்றார்.அதிக உயர நாயகிஇயக்குநராகும் கனவுடன், திரையுலகில் நுழைந்த அஞ்சலி அனிஷ், எதிர்பாராமல் நடிகையானார். ரிஷி நாயகனாக நடிக்கும் மனத கடலு படத்தில், நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அஞ்சலி கூறுகையில், ''ரிஷியின் பல படங்களை பார்த்து, அவருடன் நடிக்க வேண்டும் என, விரும்பினேன், அது நிறைவேறியது. நான் அதிக உயரம் கொண்டவள். எனக்கு ஹீரோவாக நடிப்பவர் என்னை விட, உயரமாக அமிதாப் பச்சன் போன்று இருக்க வேண்டும். ரிஷியும் அதிக உயரம் உள்ளவர். இவரை போன்று மேலும் பல ஸ்டார்களுடன் நடிக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன். இத்திரைப்படம், மாறுபட்ட கதை கொண்டது,'' என்றார்.திகில் குறும்படம்ஒரு காலத்தில் கன்னட திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சுதாராணி. நீண்ட காலம் நடிப்பை ஒதுக்கிய இவர், தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடிக்கிறார். இதற்கிடையே கோஸ்ட் என்ற குறும்படத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளரும் இவரே. கதை பற்றி இயக்குநர் சுதேஷ் கேட்ட போது, ''குறும்படத்தில் சுதாராணியுடன், நானும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். உலகில் நல்லது இருப்பதை போன்று, கெட்டதும் இருக்கும். கடவுளும் இருக்கிறார்; பேயும் இருக்கிறது. அது அவரவர் கற்பனை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த இழையை வைத்து கொண்டு இந்த குறும்படம் தயாராகியுள்ளது. இது திகில், திரில்லிங் கதை கொண்டது,'' என்றார்.இரு கதாபாத்திரங்கள்நடிகை குஷி ரவி நடிக்கும், நீதி திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இது பற்றி அவர் கூறுகையில், ''கவுதம் மணிவண்ணன் இந்த படத்தை தயாரிக்கிறார். பல இயக்குநர்களிடம் உதவியாளாக பணியாற்றிய ராஜகோபால், இப்படத்தை இயக்குகிறார். ஒரு பங்களாவில், இரண்டு கதாபாத்திரங்களை சுற்றிலும் நடக்கும் கதையாகும். படத்தில் பல மர்மங்கள், திகில்கள், புதிர்கள் உள்ளன. திரையங்குக்கு வந்தால், இதற்கான விடை கிடைக்கும். முக்கிய கதாபாத்திரத்தில், நான் நடித்துள்ளேன். விரைவில் திரைக்கு வரும்,'' என்றார்.
23-May-2025