சினிகடலை
புதுப்பொலிவுசகோதரர்களான துருவா சர்ஜா, சிரஞ்சீவி சர்ஜா இடையிலான பந்தம் மிகவும் ஆழமானது. இணை பிரியாமல் இருந்தனர். ஆனால் 2020ன் ஜூன் 7ம் தேதியன்று சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். அந்த வலி, அவர்கள் குடும்பத்தை இன்னமும் வாட்டுகிறது. துருவா சர்ஜா, தன் அண்ணனின் நினைவாக, அவரது பைக்குக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளார். சிரஞ்சீவி சர்ஜா விரும்பி பயன்படுத்திய 'யமஹா ஆர்டி 350' ரக பைக், கேரேஜில் நின்றிருந்தது. இதை பழுது பார்த்து, வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்துகிறார். அவரது தந்தையும், மகன் பயணித்த பைக்கில் சவாரி செய்து நெகிழ்ச்சி அடைகிறார். பைக்கின் போட்டோ சோஷியல் மீடியாவில் பரவியுள்ளது.காவலாளி நாயகன்நுாற்றுக்கணக்கான படங்களில், ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய கவுரவ் வெங்கடேஷ். முதன் முறையாக நாயகனாக அறிமுகமாகிறார். படத்துக்கு ஒந்து சுந்தர தெவ்வத கதே என, பெயர் சூட்டியுள்ளனர். இது நடன இயக்குநருமான கபில் இயக்கும் 10வது படமாகும். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஆறு இளம் பெண்கள், தங்களின் கல்விக்காக பணம் சேமித்து வைத்துள்ளனர். இந்த பணம் பறிபோகிறது. இதனை காலனியில் காவலாளியாக பணியாற்றும் நாயகன் மீட்டு தருகிறார். எப்படி மீட்கிறார் என்பதை, திரையில் பார்க்க வேண்டும். கவுரவ் வெங்கடேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.பரம ரகசியம்நடிகை ருக்மிணி வசந்துக்கு, கன்னடத்தில் மட்டுமின்றி தெலுங்கிலும் 'டிமாண்ட்' எகிறுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் பிரசாந்த் நீல் காம்பினேஷனில் தயாராகும் தெலுங்கு படத்துக்கு, ருக்மிணி வசந்த் நாயகியாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வருகிறது. உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை பற்றி எந்த விபரங்களும் வெளியே கசியாமல், படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இப்படம் பெருந்தொகையில் தயாராகிறதாம்.புதியவர்கள் கோட்டைபுதியவர்களே இணைந்து தயாரிக்கும் அவனிர பேகித்து படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியானது. டிரெய்லர் குறித்து, பாசிட்டிவ் கருத்துகள் வெளியானதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய அசோக் சாம்ராட், முதன் முறையாக இப்படத்தை இயக்கி உள்ளார். அவரது நண்பர் முரளி, பணம் முதலீடு செய்துள்ளார். பிரபல அசை அமைப்பாளர் ஹம்சலேகாவின் சீடர் லோகி தவஸ்யா, இசை அமைத்துள்ளார். புதுமுகங்கள் பரத், சவும்யா நாயகன், நாயகியாக அறிமுகம் ஆகியுள்ளனர். இயக்குனர் அசோக், தயாரிப்பாளர் முரளியும் புதுமுகங்கள்தான்.மீண்டும் வருகிறார்கன்னட திரையுலகின் தீபா சன்னிதி, திடீரென நடிப்பில் இருந்து ஒதுங்கினார். சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த இவர், 2017ல் இருந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சோஷியல் மீடியாவிலும் தென்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பின், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்ய துவங்கியுள்ளார். தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் மீண்டும் நடிப்புக்கு திரும்புவார் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இயக்குநர்கள் தீபா சன்னிதியிடம் கதை கூற ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவரை விரைவில் திரையில் பார்க்கலாம்.கமல் ஸ்ரீதேவி சுனில் குமார் இயக்கிய, கமல் ஸ்ரீதேவி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் கிஷோர் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமியின் மகன் சச்சின் நாயகனாக நடிக்கிறார். இப்படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தயாராகிறது. இது சச்சின் நடிக்கும் மூன்றாவது படமாகும். விரைவில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் தயாராகின்றனர். இதில் சங்கீதா பட் நாயகியாக நடிக்கிறார்.