உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.1.70 கோடி வசூல்

மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.1.70 கோடி வசூல்

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் மலை மஹாதேஸ்வரா மலை கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். 30 நாட்களுக்கு பின் நேற்று முன் தினம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இரவு வரை பணி நீடித்தது. உண்டியலில், 1.70 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது. 30 கிராம் தங்கம், 1,100 வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வந்தன. 'இ - உண்டியல்' மூலம், 3,92,123 வந்துள்ளது. புழக்கத்தில் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் மூன்று நோட்டுகள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை