உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நம்பரை பிளாக் செய்த காதலி கல்லுாரி மாணவர் தற்கொலை

நம்பரை பிளாக் செய்த காதலி கல்லுாரி மாணவர் தற்கொலை

சிக்கபல்லாபூர், : காதலி, தன் மொபைல் போன் எண்ணை 'பிளாக்' செய்ததால், கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவின் வயநாடை சேர்ந்தவர் முகமது ஷபீர், 26. இவர் சிக்கபல்லாபூர் நகரின் பரேசந்திரா கிராமத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்லுாரியில், 'அலைடு சைன்ஸ் கோர்ஸ்' இறுதியாண்டு படித்தார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார். இன்னும் சில மாதங்களில், படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு செல்லவிருந்தார். முகமது ஷபீர், தன்னுடன் படித்த சக மாணவியை காதலித்து வந்தார். ஏதோ காரணத்தால், இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. இவருடன் பேசுவதை காதலி தவிர்த்தார். இவரது மொபைல் போன் எண்ணையும், 'பிளாக்' செய்து விட்டார். இதனால் மனம் நொந்த மாணவர், நேற்று அதிகாலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, தன் அறை ஜன்னல் கம்பியில் டவல் கட்டி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் விடுதி மாணவர்கள், இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பரேசந்திரா போலீசார், மாணவரின் உடலை மீட்டனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை