உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்

பெங்களூரு: சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பெங்களூரில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:மாநில அரசின் தோல்வியால் ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் உயிர் பறிபோய் உள்ளது. முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தெலுங்கானாவில் அல்லு அர்ஜுன் படம் வெளியானபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்தார்.அங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது. இங்கு நடந்த துயரத்தில் யாரை கைது செய்ய போகிறீர்கள்?வயநாட்டில் யானை தாக்கி இறந்தவருக்கு, கர்நாடக அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாயா? இறந்த 11 பேர் குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் அறிவிக்க வேண்டும். இச்சம்பவம் பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும்.இறப்பு குறித்து ஊடகத்தில் செய்தி வெளியான நேரத்தில், துணை முதல்வர் சிவகுமார் சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மனிதாபினம் இல்லையா அவருக்கு?இந்த சம்பவத்தில் இருந்து அரசு தப்பிக்க முடியாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து, கிரிக்கெட் வீரர்களுடன் செல்பி எடுக்க தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.எங்கே போனார் சித்து?கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தபோது, முதல்வர் சித்தராமையா எங்கு சென்றார் என்று மாநில மக்கள் கேட்கின்றனர். எனக்கு கிடைத்த தகவல்படி அவர் ஹோட்டல் ஒன்றில் தோசை, பாதாம் அல்வா சாப்பிட சென்றுள்ளார். ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது நீரோ வயலின் வாசித்தது போன்று உள்ளது சித்தராமையாவின் செயல்பாடு.சலவாதி நாராயணசாமி,மேல்சபை எதிர்க்கட்சி தலைவர்

டி.சி.பி.,யும் காயம்

பெங்களூரு வடக்கு மண்டல டி.ஜி.பி., சைதுல் அதாவத். இவர் நேற்று முன்தினம் சின்னசாமி மைதானத்தின் 19வது கேட் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ரசிகர்கள் கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால், ரசிகர்களை விரட்ட தடியடி நடத்த துவங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அவரும் சிக்கி காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை