உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குண்டுவெடிப்பில் தொடர்பு கிரிஷ் மட்டன்னவர் மீது புகார்

குண்டுவெடிப்பில் தொடர்பு கிரிஷ் மட்டன்னவர் மீது புகார்

பெங்களூரு: 'மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பில், சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவருக்கு தொடர்பு இருக்கலாம்' என, பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம், சமூக ஆர்வலர் பிரசாந்த் சம்பரகி புகார் செய்துள்ளார். முன்னாள் 'பிக்பாஸ்' போட்டியாளரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் சம்பரகி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கை, நேற்று காலை சந்தித்தார். தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியை சேர்ந்த, சமூக ஆர்வலர் கிரிஷ் மட்டன்னவர் மீது புகார் அளித்தார். பின், பிரசாந்த் சம்பரகி அளித்த பேட்டி: கிரிஷ் மட்டன்னவர் பல வீடியோக்களில், தனக்கு வெடிகுண்டு தயாரிக்க தெரியும் என்று கூறி உள்ளார். அவர் எஸ்.ஐ.,யாக பணியாற்றியபோது, எம்.எல்.ஏ., ஒருவரின் வீட்டின் அருகே நான்கு குண்டுகளை வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். மங்களூரில் 2022ல் குக்கர் குண்டுவெடித்தது. கைதான பயங்கரவாதிகள் தர்மஸ்தலாவில் உள்ள கோவில்களை குறிவைத்ததாக கூறினர். தற்போது கிரிஷ் மட்டன்னவரும், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் குறித்து அவதுாறு பரப்புகிறார். இதனால் குக்கர் குண்டுவெடிப்பில் இவருக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே அதுபற்றி விசாரிக்கும்படி புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ