உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருடர்களை தப்பிக்க விட்ட எஸ்.ஐ., தங்கவயல் எஸ்.பி.,யிடம் புகார்

திருடர்களை தப்பிக்க விட்ட எஸ்.ஐ., தங்கவயல் எஸ்.பி.,யிடம் புகார்

பேத்தமங்களா: வீடு புகுந்து திருட முற்பட்டபோது, வீட்டின் உரிமையாளரிடம் சிக்கிய பெண் உட்பட ஆறு பேர், பேத்தமங்களா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அந்த கும்பலை போலீசார் தப்பிக்கவிட்டனர். தங்கவயல் எஸ்.பி.,யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. பேத்தமங்களா -- கேசம்பள்ளி சாலையில் ஸ்ரீ நகர் என்ற இடம் உள்ளது. இங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அக்டோபர் 27ம் தேதி மதியம், தன் வீட்டின் நுழைவு வாயில் கதவை திறந்து வைத்துவிட்டு, வீட்டினுள் குளிக்க சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட 20 வயது பெண் வீட்டுக்குள் சென்று நோட்டமிட்டு, வீட்டில் யாரும் இல்லை என, தன் கும்பலுக்கு சிக்னல் கொடுத்துள்ளார். பீரோவை உடைத்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்குமாறு அக்கும்பல் கூறியுள்ளது. பீரோ உடைக்கும் சத்தம் கேட்டு, குளிக்க சென்றவர் உஷாரானார். பீரோவை உடைத்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தார். ஒரு அறையில் வைத்து பூட்டினார். அந்த பெண்ணுக்காக காத்திருந்த, மற்ற ஐந்து பேரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் பிடித்தார். இந்த கும்பலை பேத்தமங்ளா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 'வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பேன்' என்று கூறிய எஸ்.ஐ., குருராஜ் சிந்தக்கல், அன்று மாலையே அவர்களை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற்றி உள்ளார். தகவல் அறிந்த வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரித்தார். 'குப்பை காகிதங்களை சேகரிப்பவர்கள். அவர்கள் மீது வழக்குப் போட முடியாது' என்று கூறி அனுப்பிவிட்டதாக தெரிய வந்தது. இதனால், கிருஷ்ண மூர்த்தி, தங்கவயல் மாவட்ட எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத்திடம் புகார் செய்தார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை