மேலும் செய்திகள்
இலவச ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனம் வழங்கல்
08-Jun-2025
தங்கவயல்: சாம்சங் நிறுவன நிதி உதவியுடன், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.தங்கவயல் கோரமண்டல் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. கிராமப்புறப் பகுதி மாணவர்களின் ஒளிமயமான எதிர்க்காலத்துக்காக சாம்சங் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, கணினி ஆய்வகத்தை அமைத்து கொடுத்தது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆய்வகத்தை, மாநில தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் மஞ்சுஸ்ரீ மற்றும் சாம்சங் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார்.“வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு கம்ப்யூட்டர் கல்வி மிக அவசியமானது. இன்றைய சமுதாயத்தில் கம்ப்யூட்டருக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கம்ப்யூட்டர் கல்வியை மாணவர்கள் பெறுவது அவசியம்,” என, தொழில்நுட்ப கல்வி ஆணையர் மஞ்சுஸ்ரீ தெரிவித்தார்.“பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான இணைப்பு சாலை வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்,” என, எம்.எல்.ஏ., ரூபகலா உறுதி அளித்தார்.நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நிலைக் குழுத் தலைவர் வி.முனிசாமி, நகராட்சி ஆணையர் மஞ்சுநாத், கவுன்சிலர் பிரபு குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Jun-2025