உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அதிகாரிகளுடன் மோதல்? ஏ.டி.ஜி.பி., ரவி திடீர் ராஜினாமா

அதிகாரிகளுடன் மோதல்? ஏ.டி.ஜி.பி., ரவி திடீர் ராஜினாமா

பெங்களூரு: கர்நாடக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ரவி திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி. இன்னும் ஆறு மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, டி.ஜி.பி., சலீமுக்கு, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினார். இந்த தகவலை டி.ஜி.பி., சலீம் நேற்று உறுதி செய்தார். ரவியின் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளதாக கூறிய சலீம், ரவி தனது கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு பெற உள்ளதாக குறிப்பிட்டு இருப்பதாகவும் தெளிவுப்படுத்தினார். ஆனாலும் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே ரவி ராஜினாமா செய்தததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1998ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக பணியாற்றினார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ரவி, ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற முடிவு செய்து இருக்கலாம் என்றும், போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை