போதுமப்பா காங்., அரசு ம.ஜ.த., இன்று போராட்டம்
பெங்களூரு: ''போதுமப்பா போதும், காங்கிரஸ் அரசு போதும் என, நாங்கள் கோஷமிடவில்லை. இது கன்னடர்களின் உணர்வு.''விலை உயர்வால் மக்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது,'' என இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் வெறுப்படைந்துள்ளனர். போதுமப்பா போதும் காங்கிரஸ் அரசு போதும் என, அதிருப்தி தெரிவித்துஉள்ளனர்.ஒவ்வொரு கிராமத்திலும் மக்களின் உணர்வு இதே தான். இது மக்களுக்கு எதிரான அரசு. காங்கிரசின் மோசமான ஆட்சிக்கு தக்க பதிலடி தர வேண்டும்.'போதுமப்பா போதும் காங்கிரஸ் அரசு' என்ற கோஷத்துடன், 'விதான்சவுதா சலோ' போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பர். 48 பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்த முடியவில்லை.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்ததில் இருந்து, ஒவ்வொரு பொருட்களின் விலையும் உயருகிறது. இதை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டத்தை பா.ஜ., நடத்தி வருகிறது. அதேபோன்று ம.ஜ.த.,வும் பெங்களூரின் சுதந்திர பூங்காவில் நாளை (இன்று) காலை 11:00 மணிக்கு போராட்டம் நடத்தவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.