உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசியலமைப்பை அவமரியாதை செய்த காங்கிரஸ்: பிரஹலாத் ஜோஷி

அரசியலமைப்பை அவமரியாதை செய்த காங்கிரஸ்: பிரஹலாத் ஜோஷி

பெங்களூரு : பெங்களூரில் ஏ.பி.வி.பி., ஏற்பாடு செய்திருந்த 'அரசியலமைப்பை மாற்றியது யார்? அதை பலப்படுத்தியது யார்?' என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.இதில் பங்கேற்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:அம்பேத்கரை அவமரியாதை செய்தவர்களே, இன்று அரசியலமைப்பை பாதுகாவலர்களாக சித்தரிக்கின்றனர். அரசியலமைப்பை மாற்ற பா.ஜ., முயற்சிக்கிறது என்று காங்கிரசார் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அவர்களே அரசிலமைப்பை பலமுறை அவமரியாதை செய்துள்ளனர்.இந்திரா தன் நாற்காலியை தக்க வைத்து கொள்ள, அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. இது 1975ல் அரசிலயமைப்பின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். இந்திராவின் வெற்றியை செல்லாது என்று அறிவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சட்டப்பிரிவு 38, 39, 42ஐ திருத்தியது.அம்பேத்கரை வீழ்த்தியது வீர் சாவர்க்கர் தான் என்று அம்பேத்கர் கடிதம் எழுதியதாக சீனியர் கார்கேவும், ஜூனியர் கார்கேவும் கூறுகின்றனர். ஆனால் அம்பேத்கரை தோற்கடிக்க, அவருக்கு எதிராக அப்போதைய பிரதமர் நேரு, இரண்டு முறை பிரசாரம் செய்தார்.அம்பேத்கரை தோற்கடித்த ஒரே காரணத்துக்காக, கர்ஜோல்கருக்கு 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. அதன் பின்னரே, பா.ஜ.,வின் அழுத்தத்தால், 1987ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கருக்கும், அவர் எழுதிய அரசியலமைப்புக்கும் காங்கிரஸ் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை