உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மஹா., அரசுக்கு எதிராக போராட்டம் காங்., - எம்.எல்.ஏ., அழைப்பு

மஹா., அரசுக்கு எதிராக போராட்டம் காங்., - எம்.எல்.ஏ., அழைப்பு

விஜயபுரா : கர்நாடகாவின் வடமாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கண்டுகொள்ளாமல், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை கடைப்பிடிப்பதாக, இண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த் ராயகவுடா பாட்டீல் குற்றஞ்சாட்டினார். இண்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மஹாராஷ்டிரா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்நாடகாவின் வட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஹெக்டேர் பயிர் நாசமானதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இல்லாததால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை கடைப்பிடிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையிலான பா.ஜ., குழு, வட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வரவில்லை. புகைப்படத்திற்கு 'போஸ்' கொடுக்க வந்துள்ளனர். விவசாயிகளிடம் அவர்கள் பேசவே இல்லை. மாநில அரசை விமர்சனம் செய்யாமல், மத்திய அரசிடம் இருந்து தேசிய பேரிடர் நிவாரண தொகை வாங்கி தர, பா.ஜ., தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். கிருஷ்ணா, பீமா, காவிரி ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மஹாராஷ்டிரா அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதால், விஜயபுரா, கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் மஹாராஷ்டிராவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி