உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என்னை கொல்ல ரூ.70 லட்சம் பேரம்; காங்., - எம்.எல்.சி., ராஜேந்திரா பகீர்

என்னை கொல்ல ரூ.70 லட்சம் பேரம்; காங்., - எம்.எல்.சி., ராஜேந்திரா பகீர்

துமகூரு : ''என்னை கொலை செய்ய கூலிப்படையிடம் 70 லட்சம் ரூபாய் பேரம் பேசி உள்ளனர்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ராஜேந்திரா பகீர் தகவல் கூறி உள்ளார்.துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவின் மகன் ராஜேந்திரா. காங்கிரஸ் எம்.எல்.சி.,யான இவர், நேற்று முன்தினம் மாநில டி.ஜி.பி., அலோக் மோகனை சந்தித்து தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக புகார் அளித்தார்.நேற்று துமகூரு எஸ்.பி., அசோக்கிடம், தன்னை கொல்ல முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டு பக்க புகார் கடிதம் அளித்தார். பின், ராஜேந்திரா அளித்த பேட்டி:என்னை கொலை செய்ய கூலிப்படைக்கு 70 லட்ச ரூபாய் பேரம் பேசி உள்ளனர். முன்பணமாக 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கின்றனர். இதுதொடர்பான ஆடியோ உரையாடல் எனக்கு கிடைத்தது.அந்த ஆடியோவில் ஒரு பெண்ணின் குரல் உள்ளது. சோமா, பரத் ஆகியோரின் பெயர்களும் கூறப்படுகின்றன. அவர்கள் யார் என்று தெரியவில்லை. என்னை கொல்ல ஏற்பாடு செய்த கூலிப்படையில் 20 பேர் உள்ளனர்.என் காரில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி, நான் எங்கு செல்கிறேன் என்று கண்காணிக்க முயற்சி செய்தனர். டி.ஜி.பி.,யின் ஆலோசனையின்படி, துமகூரு எஸ்.பி.,யிடம் இரண்டு பக்க புகார் கடிதம் கொடுத்துள்ளேன்.'ஹனி டிராப்' பற்றி புகாரில் எதுவும் குறிப்பிடவில்லை. எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருவது பற்றி, எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு சென்று, கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளேன். 'கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பர்' என, எஸ்.பி., என்னிடம் கூறி இருக்கிறார். யாருக்கும் என் மீது வெறுப்பு இல்லை. ஆனால் என்னை கொல்ல முயற்சி நடப்பது ஏன் என்பது தெரியவில்லை.சட்டவிரோதமாக எந்த தொழிலும் நான் செய்யவில்லை. என் வீட்டிற்கு ஷாமியானா பந்தல் போட வந்தவர்கள் என்னை தாக்கினர். ஆனால் ஷாமியானா உரிமையாளர் யார் என்று கூற மாட்டேன். என்னை தாக்கியவர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை