கிரேன் வாகனம் ஏறியதில் கட்டட தொழிலாளி பலி
ஷிவமொக்கா: பின்நோக்கி வந்த கிரேன் வாகனத்தின் சக்கரத்தில் தவறி விழுந்த கட்டட தொழிலாளி, தலை நசுங்கி உயிரிழந்தார். ஷிவமொக்கா நகரின் ஹொசமேன லே - அவுட்டில் உள்ள தொட்டம்மா ஜலதுர்கம்மா கோவில் கோபுரம் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று வழக்கம் போல, தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை கற்களை கிரேன் வாகனம் ஏற்றி வந்தது. கற்களை இறக்கிய பின், பின்நோக்கி சென்றது. அப்போது, வாகனத்துக்கு வழிவிட நகர முயற்சித்தபோது கால் தவறி விழுந்தார். அப்போது, கிரேனின் சக்கரம், தொழிலாளி தலை மீது ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த தொட்டப்பேட்டை போலீசார் வந்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின் பிலிகுட் கிராமத்தை சேர்ந்த நாகேஷ், 48, என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.