உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் கமிட்டி அமைக்க கர்நாடக அரசு முடிவு

கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் கமிட்டி அமைக்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டது.தடுப்பூசி போட்ட பின் மனிதர்கள் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், திடீர் மரணங்கள் நிகழ்வதாகவும் குறிப்பாக தடுப்பூசி போட்ட பின், இளம் தலைமுறையினர் மரணம் அதிகரித்து இருப்பதாக பகீர் தகவல் வெளியானது.இந்நிலையில், முதல்வர் சித்தராமையா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர்கள், முதியவர்கள் உட்பட உயிர்வாழ வேண்டியவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர். இதனால் அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர் இது ஒரு கடுமையான பிரச்னை.இப்பிரச்னையின் மூலாதாரத்தை கண்டுபிடித்து விரைவில் தீர்க்க வேண்டும் என்று நினைத்தேன். மூத்த பத்திரிகையாளர் ராஜாராம் தல்லுார், இதுபற்றி எனக்கு கடிதம் எழுதினார்.தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர்கள், விஞ்ஞானிகள் குழுவை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் ஏதாவது தவறு இருந்தால், நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் அரசு உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி